வாலாஜாவை சேர்ந்தவர்‌ ஜெகன்‌(31). இவர்‌ கலவை அடுத்த வாழைப்பந்தல்‌ பச்சையம்மன்‌ கோயிலில்‌ நேற்று முன்தினம்‌ சுவாமி தரிசனம்‌ செய்தார்‌. பின்னர்‌ பைக்கில்‌ வீட்டிற்குப் புறப்பட்டார்‌ கலவை அடுத்த அல்லாளச்சேரி கிராமம்‌ அருகே சென்றபோது பின்னால்‌ வந்த லோடு ஆட்டோ பைக்கை முந்திச்சென்று வலது புறமாகத் திரும்பியுள்ளது.

அப்போது ஜெகன்‌ ஓட்டி வந்த பைக்‌ மீது ஆட்டோ மோதியதில்‌ அவர்‌ கீழே விழுந்து படுகாயம்‌ அடைந்தார்‌. அவரை அங்கிருந்தவர்கள்‌ மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்‌. இதுகுறித்து ஜெகன்‌ கொடுத்த புகாரின் பேரில் கலவை சப்‌-இன்ஸ்பெக்டர்‌ சரவணமூர்த்தி மற்றும்‌ போலீசார்‌, ஆட்டோவை ஓட்டிய கலவை அடுத்த நல்லூர்‌ கிராமம்‌ ரோட்டுத்தெருவை சேர்ந்த குமார்‌(25) என்பவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌.