தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். சுகாதாரத்துறை, காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா அறிகுறி உள்ள மாணவர்களை எவ்வாறு கண்டறிவது, அவர்களை எவ்வாறு நடத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. 

நாளை மறுநாள் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் ஆசிரியா்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் கிருமி நாசினிகள் முழுமையாக தெளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.