வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,  ஆகிய மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் ரேஷன் கார்டு, ஆதார் எண் சேகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவை தேர்தலையொட்டி, திமுக சார்பில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திமுக அரசு ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் கடந்த நிலையில், பல்வேறு திட்டங்கள், வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போது, கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் ரேஷன் கார்டு, ஆதார் எண் சேகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை பொதுமக்கள் அறிந்து, சரியான ஆவணங்களை கொடுத்து பயன்பெலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.