இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பாண்டில், வங்கிகள், அரசுத் துறைகள்மூலம், விவசாயிகள், தொழில்முனைவோர் , மற்றும் பொதுமக்களுக்கு கடனுதவிகள் நல்ல இலக்கை அடைந்து வருகிறது.

மாவட்ட தொழில்மையம், தொழில் தொடங்கடன் உதவிகள், தாட்கோ வங்கி கடன் , மகளிர்உதவிக்குழுக்களுக்கான கடன், மற்ற துறைகளின் முலமான கடன்கள் குறித்து வங்கிகளின் இலக்கு , எட்டியவை குறித்து மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வங்கி அதிகாரிகள் மற்றும்அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆய்வினை மேற்கொண்டார். ஆய்வில் கடன் வழங்குவதில் ஏற்படும் பிரச்சினைகள் அவற்றை களயவேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது..

அதனைத்தொடர்ந்து, மாவட்டத்தில் மகளிர் சுயுதவிக்குழுவுக்கு நிர்ணயிக்கப்பட்ட₹350கோடி கடன் இலக்கில் இதுவரை 60கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதி இலக்கை விரைந்து வழங்கிடவேண்டும் மகளிர் குழுவிற்கு வழங்குவதால் குடும்பங்கள் ஏழ்மை நீங்கி, குடும்ப பொருளாதாரம் சமூக பொருளாதரம் வளரும் என்றார்.

மகளிர் சுயவுதவிக்குழுவினர் 100 சதவீதம் கடனைதிருப்பி விடுகின்றனர். மீண்டும், மீண்டும் கடன்வழங்க வேண்டும் அதிகபட்சமாக ₹20லட்சம் வரை கடன் வழங்க அரசு உத்தரிவிட்டுள்ளது. 

அனைத்து வங்கிகளும் மகளிர்குழுவிற்கு கடன் களை வழங்கி சிறப்பாக இயங்கும் குழுவினரை ஊக்குவிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்யவேண்டும் என்றும் எக்காரணத்தைக்கொண்டும் அவர்களுக்கு கடன்உதவி வழங்குவதை நிறும்தக்கூடாது என்று அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

மேலும், கொரோனா தொற்று காரணமாக தெருவோர கடைவியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர் எனவே அவர்களின் கடன் தொகை₹10000ஐ வங்கிகள் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் வழங்கிட வேண்டும். இதுவரை 354 கடனுக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது அவற்றைப்பரிசீலித்து விரைவில் வழங்கவேண்டும். பின்பு அவர், மாவட்டத்தில் உள்ள 16 மீன்கூட்டுறவு சங்கங்கள் மூலம்222விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது.

அதில் தனிகவனம் செலுத்தி தகுதியான நபர்களை நேரடியாக ஆய்வு செயது அவர்தொழில் மேம்பட விரைந்து கடன் வழங்கிட மீன்வளத்துறை உதவி இயக்குநருடன் இணைந்து செயல்படும்படி மாவட்ட ஆட்சியர் கூறினார்.

ஆய்வு கூட்டத்தில்ஊரக திட்டயக்குநர் முகமை லோகநாயகி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கிருஷ்ணராஜ், நபார்டு வங்கி மாவட்ட மேம்பாடுதிட்ட மேலாளர் ஸ்ரீராம், முன்னோடிவங்கிகளின் மேலாளர் ஆவியம்மா ஆப்ரகாம், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர்ஆனந்தன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் விஜயகுமார், மாவட்ட தாட்கோ வங்கி மேலாளர்பிரேமா உள்ளிட்ட அனைத்து வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.