District Superintendent of Police Deepa Sathyan greeted the Minister

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த தேஷ்முக் சேகர் சஞ்சய், மதுரை 6-வது பட்டாலியன் கமாண்டராக இடமாற்றம் செய்ததை தொடர்ந்து அவருக்கு பதிலாக, சென்னை ரயில்வே கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த டாக்டர் தீபா சத்யன், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றுள்ள தீபா சத்யன் அவர்கள் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி அவர்களை நேரில் சந்தித்து அவர்களை
பூங்கொத்து கொடுத்து மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.