இராணிப்பேட்டை மாவட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கம் RADSMIA சாா்பாக தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் இன்று மாலை 3. 00 மணிக்கு சோளிங்கரில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை மாவட்ட தொழில் மையம் DIC பொது மேலாளா் ஆனந்தன், மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் TIIC மேலாளா் காதம்பரி அவர்கள் சிறப்புரை ஆற்றி சிறு, குறு தொழில் சாா்ந்த அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் அதற்கான வழிகாட்டுதல் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைத்தனர். இதில் தொழில் முனைவோரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை மாவட்ட சிறு குறு தொழிற்சாலைகள் RADSMIA. தலைவர் சந்திரகாசன் தலைமை தாங்கினார். செயலாளர் புனிதவேல், இணைச்செயலாளா் சண்முகநாதன், முரளி, ரோசய்யா, மகேந்திரன் மற்றும் சங்க உறுப்பினர்கள், ஏராளமான தொழில் முனைவோா்கள் கலந்துகொண்டு சிறப்பித்து பயன்பெற்றனர்.