ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்வுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செப்டம்பர் 1-ம் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறை தீர்வுக்கூட்டம் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற இருந்த விவசாயிகள் குறை தீர்வுக்கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. இம்மாதத்துக்காக விவசாயிகள் குறை தீர்வுக்கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.