ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 1 ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நடைபெறும். 

இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் பிரச்னைகளை, கோரிக்கை வாயிலாகவும், மனுக்கள் மூலமாகவும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.