ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம் தோணிமேடு கிராமத்தில் செயல்பட்டு வரும் நேரடி கொள்முதல் நிலையத்தில் மாம்பாக்கம் தோனி மேடு பாலி கன்னிகாபுரம் பொன்னம்பலம் சொரையூர் வேம்பி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த 1700 மூட்டை நெல்லை தோனிமேடு நெல் கொள்முதல் நிலையத்தில் விற்க சென்றனர் அங்கு செயல்படும் அதிகாரியும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வியாபாரியும் நெல்லை வாங்கிக்கொண்டு பில்லும் பணம் கொடுக்காமல் 4 மாத காலமாக அலைகழிக்கின்றனர்.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமும் நெல்லுக்கு பணம் தர கேட்டு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட விவசாயிகளோடு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.காவல்துறை சார்பாக கேட்டுகொன்டதின் பேரில் கொரனா விதிகளுக்குட்பட்டு ஏழு பேர் மட்டும் ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.இந்த ஆர்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்ட தலைவர் மணி வி தொ ச மாவட்ட துணை தலைவர் கிட்டுதோணிமேடு முன்னால் தலைவர் வெங்கிடேசன்மாம்பாக்கம் ராஜேந்திரன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.