ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் ராணிப்பேட்டை , ஆற்காடு , கலவை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான காற்றுடன் மழை பெய்தது.
நள்ளிரவு 12 மணியளவில் மாவட்டத்தின் முக்கிய நகர்ப்புற பகுதிகளில் அதிக மழைப் பொழிவு காணப்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

மாவட்டத்தில் அதிகபட்சமாக கலவையில் 36.4 மி.மீட்டர் மழைஅளவு பதிவானது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் ( மி.மீட்டரில் ) , அரக் கோணம் 0.4 , ஆற்காடு 29 , நெமிலி ( காவேரிப்பாக்கம் ) 14 , வாலாஜா 29.2 , அம்மூர் 9.3 , சோளிங்கர் 13 , கலவையில் 36.4 . மொத்த மழை அளவு 131.3. 

சராசரி மழைஅளவு 18.7 மி.மீ.