Income tax check at iron merchant's house near Ranipet
ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அருகே, இரும்பு வியாபாரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே திமிரியை சேர்ந்தவர் தங்கராஜ், 56. இவர் பழைய, புதிய இரும்பு பொருட்களை வாங்கி வியாபாரம் செய்கிறார். சென்னை வருமான வரித்துறை ஜி.எஸ்.டி., பிரிவு அதிகாரிகள் இன்று (ஆக.17) மதியத்திலிருந்து 6:00 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.
அதே போல வேலுார் மாவட்டம், குடியாத்தததில் உள்ள பழைய இரும்பு வியாபாரி ராஜா, 54, என்பவர் வீட்டிலும் இரவு 9:00 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வியாபாரிகள் ஜி.எஸ்.டி., கட்டாமல் மோசடியில் ஈடுபட்டதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்(56) இவர் அதே பகுதியில் 25 ஆண்டு காலமாக பழைய இரும்புகளை பெற்று விற்பனை செய்யும் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார் இந்நிலையில் அவர் GSTவரி ஏய்ப்பு செய்ததாக சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு அமலாக்க துறைக்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட 30 பேர் கொண்ட குழு ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியில் உள்ள அவரது வீடு ,கடைகள் மற்றும் வேலூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் குடியாத்தம் பேரணாம்பட்டு திருப்பத்தூர் உள்ளிட்ட உள்ள ஆறு தங்கராஜ் சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் பிரிந்து ஒரே சமயத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
இன்று காலை 11 மணி அளவில் தொடங்கிய சோதனை மாலை ஆறு முப்பது மணி வரை நீடித்தது இந்த சோதனையில் GST வரிஏய்ப்பு சம்பந்தமான ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும் வரிஏய்ப்பு கோடிகளில் இருக்கும் எனவும் மேலும் விசாரணை முடிவில் தங்கராஜ் கைது செய்யப்படுவார் எனவும் தெரிவித்தனர் ஜிஎஸ்டி தொடர்பான வரிஏய்ப்பு சோதனைகள் பார்க்க சாதாரணமாக இருப்பது போல் தெரியும் ஆனால் விசாரணை முடிவில் வரிஏய்ப்பு என்பது பல கோடியில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.