ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா ஒத்திகை நடைபெற்றது.

ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வரும் 15ஆம் தேதி 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ ஆர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
விழாவினை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில் சுதந்திர தின விழா ஒத்திகை பயிற்சி ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் 46 ஆண் 23 பெண் போலீசார் ஊர்க்காவல் படையினர் கலந்துகொண்டு ஒத்திகையில் ஈடுபட்டனர்.