ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கிளாஸ்டீன் புஷ்பராஜ் அவர்கள் இன்று ராணிப்பேட்டை ஆண்கள் அரசினர் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள  இந்தியாவிலேயே முதல்முறையாக நிறுவப்பட்ட காந்தி சிலைக்கு 75வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக சுதந்திர தினவிழா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆட்சித் தலைவர் காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார் இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அலுவலர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்