ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு குட்டக்கரைதெருவைச் சேர்ந்தவர் கோபி(40). இவர் சென்னையில் ஐடி ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த அவர் நேற்று தனது தந்தை, மனைவி, குழந்தைகள் மற்றும் அண்ணன் குடும்பத்துடன் மொத்தம் எட்டு பேர் விளாப்பாக்கம் அடுத்த நாராயணபுரத்தில் அவர்களுக்கு சொந்தமான நிலத்திற்கு காரில் சென்றனர். 

காரை ஆக்டிங் டிரைவராக ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் மேட்டுத் தெருவைச் சேர்ந்த தினேஷ்(33) என்பவர் ஓட்டிச் சென்றார். அனைவரும் நிலத்திற்கு சென்ற பிறகு அங் குள்ள ஷெட்டில் ஓய்வெடுத்தனர். அப்போது தினேஷை பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு கோபி கார் ஓட்ட பழகியுள்ளார். அப்போது கார் எதிர்பாராதவிதமாக அங்கு உள்ள 80 அடி ஆழ முள்ள கிணற்றில் பின் நோக்கி வேகமாக சென்று பாய்ந்தது. 

இதைக் கண்ட அவரது உறவினர்கள் அலறியடித்துக்கொண்டு கிணற்றின் அருகில் சென்று பார்த்தனர். இதுகுறித்து உடனடியாக திமிரி போலீசாருக் கும், ஆற்காடு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தந்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்ஸ் பெக்டர் லதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் தலைமையிலான தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். காரின் இடது பக்கத்தில் அமர்ந்திருந்த தினேஷ் லேசான காயங்களுடன் காரை திறந்து கொண்டு வெளியே வந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்ட பின் தீயணைப்பு படையினர் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு காரில் சிக்கியிருந்த கோபியை மீட்டனர்.

அதைத்தொடர்ந்து கோபியை சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத் துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரு கின்றனர். தந்தை, மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கண்ணெதிரிலேயே கார் கிணற்றில் பாய்ந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.