முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ கிளினிக்குகளில் NRHM/ NAM திட்டத்தின் கீழ் தமிழ்நாடு யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறையின் உதவியாளர்கள் பணியிடத்திற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிட விபரங்கள்:

1. சிகிச்சை உதவியாளர் (ஆண்) Therapeutic Assistant (Male) – 53 பதவிகள்

2. சிகிச்சை உதவியாளர் (பெண்) Therapeutic Assistant (Female) – 82 பதவிகள்

மொத்த எண்ணிக்கை: 135 பணியிடங்கள்

கல்வித் தகுதி:

மேற்கண்ட பதவிகளுக்கு தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் நர்சிங் தெரபி டிப்ளமோ (Diploma in Nursing Therapy) படித்து தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01-07-2021 ன் படி குறைந்தப்பட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அதிகப்பட்சம் 57 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

சம்பள விகிதம்:

மேற்கண்ட பதவிக்கு நாளொன்றுக்கு ரூ. 375/- வீதம் (Hiring charges) தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்)

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப/ தேர்வுக் கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

மேலே குறிப்பிட்டுள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்து விண்ணப்பத்தினை முழுமையாக பூர்த்தி செய்து அத்துடன் தங்களின் அனைத்து கல்வி சான்றிதழ்கள், இதர சான்றிதழ்கள் மற்றும் அனுபவ சான்றிதழ் (இருப்பின்) சுய ஒப்பமிட்டு இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள், எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அவ்வாறு தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் (டிப்ளமோ 50%, 12 ஆம் வகுப்பு 30% மற்றும் 10 ஆம் வகுப்பு 20%) அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் இமெயில் ஐடி/ மொபைல் க்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு செய்தி அனுப்பப்படும்.

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 25.08.2021 மாலை 5.00 மணிக்குள்

1. இந்த வேலை வாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

1. இந்த வேலை வாய்ப்பின் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தினை (Official Application) டவுண்லோட் செய்ய செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

3. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Directorate Of Indian Medicine And Homoeopathy, Arignar Anna Government Hospital of Indian Medicine Campus, Arumbakkam (PO), Chennai-600106.