ராணிப்பேட்டையை அடுத்த புளியங்கண்ணு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 45).

இவர் இன்று ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார், சந்திரசேகரை கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.