New BH number series for vehicles all over India: How will it help you?
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு, ஒரே நாடு ஒரே ஜிஎஸ்டி வரியை தொடர்ந்து ஒரே நாடு ஒரே வாகன பதிவு திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி புதிய வாகனத்தை பதிவு செய்ய பிஎச் என்ற புதிய பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. BH சீரியஸில் வாகனத்தை பதிவு செய்தால், வாகன உரிமையாளர், மாநிலம் விட்டு மாநிலம் மாறும்போது மீண்டும் வாகனப் பதிவு செய்ய தேவையில்லை.
இப்போதுஉள்ள சட்ட விதிகளின் படி, நீங்கள் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு பணி நிமித்தம் காரணமாக செல்லும் போது, அங்கேயே இனி தங்க போகிறார்கள் என்றால், உங்கள் வாகனத்தை போக்குவரத்து வாகன விதிகளின்படி ஓராண்டிற்குள் மறு பதிவு செய்தல் வேண்டும். இப்பதிவுடன் அந்த மாநிலத்திற்கான சாலை வரியையும் வாகன உரிமையாளரான நீங்கள் கட்ட வேண்டும்.
தொழில் மற்றும் வேலை காரணமாக ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு இடம்பெறும் நிலை என்பது இந்தியா முழுவதும் அதிகரித்துள்ளது. அப்படி மாறும் போது பலர் தங்களின் வாகனத்தை அந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு பதிவை மாற்றுவதில் பல்வேறு சிக்கல்களை அனுபவித்தார்கள்.
புதிதாக வரி கட்ட வேண்டியது ஒரு புறம் எனில், ஏற்கனவே உள்ள மாநிலத்தில் அதை கொண்டு வந்தால் ஓராண்டில் புதிய புதிவு கட்டாயம் ஆகும். அதற்கு வரியும் செலுத்த வேண்டும். ஆனால் அதற்கு விதிகள் கடுமையாக இருந்த காரணத்தால் வேறு மாநிலம் போகிறவர்கள் வாகனத்தை வந்த விலைக்கு விற்றுவிட்டு சென்றவர்கள் அதிகம்.
இந்நிலையில் மாநிலம் விட்டு மாநிலம் செல்பவர்களின் வசதிக்காக 'BH' என்ற (பாரத்) என்ற சீரியஸில் வாகனங்களைபதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது. மாநிலம் விட்டு மாநிலம் செல்ல வாய்ப்பு உள்ளவர்கள் புதிய வாகனம் வாங்கிய 'BH' என்ற வரிசையில் வாகனத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
BH- தொடர் பதிவு அடையாளத்தின் வடிவம் YY BH #### XX ஆக இருக்கும். YY என்பது முதல் பதிவின் ஆண்டைக் குறிக்கிறது, BH என்பது பாரத் தொடருக்கான குறியீடாகும், #### என்பது சீரற்ற நான்கு இலக்க எண் மற்றும் XX என்பது இரண்டு எழுத்துக்கள் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, பிஎச் வாகன பதிவு வசதி (BH - Bharat series), பாதுகாப்பு துறையில் பணியாற்றுபவர்கள் , மத்திய, மாநில அரசு ஊழியர்கள், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் இந்த பிஎச் பதிவின் கீழ் வாகன பதிவினை மேற்கொள்ளலாம். இந்தியாவில் எந்த மாநிலத்தை சேர்ந்த வாகனமாக இருந்தாலும் பிஎச் என்ற சீரியஸில் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் என்ன, வழக்கமான மாநில பதிவைவிட கொஞ்சம் வரி அதிகமாக இருக்கும்.
மத்திய அரசு அறிவிப்பின்படி, பிஎச்-சீரியஸின் படி போக்குவரத்து அல்லாத வாகனங்களை பதிவு செய்யும் போது மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களால் விதிக்கப்படும் மோட்டார் வாகன வரி , வாகனத்தின் விலை 10 லட்சம் வரை இருந்தால் 8 சதவீதம் ஆக இருக்கும். வாகனங்களின் விலை ₹ 10-20 த்திற்குள்இருந்தால் வாகனங்களுக்கு 10 சதவீதம் வரியும், 20 லட்சம் ரூபாய்க்கு மேல் விலை இருந்தால் 12 சதவீதமும் வரியாக விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது . டீசல் வாகனமாக இருந்தால் இந்த வரிகளுடன் கூடுதலாக 2 சதவீதம் வரி விதிக்கப்படும். மின்சார வாகனமாக இருந்தால் இந்த வரிகளில் இருந்து 2சதவீதம் குறைவாக இருக்கும்.
The central government has introduced a single country single vehicle registration scheme following the single country ration card, single country single GST tax. Accordingly a new division called BH has been started to register the new vehicle. If the vehicle is registered in the BH Series, the vehicle owner is not required to re-register the vehicle when leaving the state.