விளாப்பாக்கம் அருகே உள்ள நாராயணபுரத்தில் சாலையோரத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள புளிய மரத்தை அகற்ற வருவாய் கோட்டாட்சியர் ( பொறுப்பு ) இளவரசி ஆய்வு செய்தார். உடன் தாசில்தார் கோபாலகிருஷ்ணன். 
ஆற்காடு தாலுகா விளாப்பாக்கம் அருகில் நாராயணபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆற்காட்டில் இருந்து கண்ணமங்கலம் செல்லும் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் சேதமடைந்த நிலையில் புளியமரம் ஒன்று உள்ளது. இதனால் ஆபத்து ஏதும் ஏற்படாமல் இருக்க அதனை அகற்ற வருவாய்த்துறை முடிவு செய்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அந்த புளிய மரத்தை அகற்றுவதற்காக ராணிப்பேட்டை கோட்டாட்சியர் ( பொறுப்பு ) இளவரசி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் அகற்ற ஆலோசனைகள் வழங்கினார் .

அப்போது ஆற்காடு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் , வருவாய் ஆய்வாளர் சுரேஷ் , விஏஓ ஜெகதீஷ் மற்றும் வருவாய் துறையினர் உடன்இருந்தனர் .