ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பத்மஸ்ரீ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் , என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . 
இதுகுறித்து ராணிப்பேட்டை கலெக்டர் கிளாட்ஸ் டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : உள்விவகாரத்துறை சார்பில் நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதுகள் வரும் 2022 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. 

கல்வி, கலை, இலக்கியம், பத்திரிக்கை, கவிதை எழுதுதல், கல்வி சீர்திருத்தம்,  விளையாட்டு, மலையேறுதல், யோகா, சாகசம், ஆயுர் வேதம், ஹோமியோபதி, சித்தா, இயற்கை மருத்துவம், சமூகத்தொண்டு, வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொது விவகாரம், இந்திய கலாச்சாரம், மனித உரிமை காப்பு, வணிகம் மற்றும் சுற்றுலா மற்றும் தொழில் உள்ளிட்ட பல் வேறு துறைகளில் சாதனை புரிந்தோருக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதுகளான பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளுக்கான தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகிறது. 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இவ்விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் உரிய ஆதாரம் மற்றும் சான்றுகளுடன் வரும் செம்டம்பர் மாதம் 15 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மருத்துவர்கள் , விஞ்ஞானிகள் தவிர்த்து அரசு மற்றும் பொது நிறுவனங்களில் பணிபுரிவோர் விண்ணப்பிக்க இயலாது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தை தொடர் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .