வாலாஜாபேட்டை அருகே, குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே தென்கடப்பந்தால்கல் கிராமத்தில் 1,200 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள குடிநீர் தொட்டியில் உள்ள மோட்டார் பழுதானதால் கடந்த மூன்று மாதமாக குடிநீர் வழங்கவில்லை. இது குறித்து பல முறை புகார் செய்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
ஆத்திரமடைந்த மக்கள் நேற்று காலை 10:00 மணிக்கு தென்கடப்பந்தாங்கல் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். 

புதிய மோட்டார் வாங்கும் வரை லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக ஊராட்சி அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.