ராணிப்பேட்டை : தோல் கழிவுகளை பாலாற்றில் கலக்க விடும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் கலெக்டர், எஸ்.பி., யிடம் மனு கொடுத்தனர்.

நாம் தமிழர் கட்சி மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சல்மான் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாஸ்ட்ன் புஷ்பராஜ், எஸ்.பி., தீபா சத்தியன் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை இயக்குனர் ஆகியோரிடம் இன்று கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரத்தில் செயல்படும் தோல் தொழிற்சாலைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சரியாக பராமரிக்கப்படவில்லை. இதனால் தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுநீர் சுத்திகரிக்காமல் நேரடியாக தினமும் இரவு 11:00 மணிக்கு, தொழிற்சாலையின் பின்புறம் உள்ள தடுப்புச்க சுவரில் துளையிட்டு அதன் வழியாக பாலாற்றில் கலக்கப்படுகிறது.இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு பொது மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

அமிலம் கலந்த கழிவுநீரை தொடர்ந்து பல ஆண்டுகளாக பாலற்றில் சட்ட விரோதமாக கலந்து வரும் தோல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.