ராணிப்பேட்டை நவல்பூர் கெல்லீஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி.
இவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 இந்தாண்டு முடித்தார். இந்நிலையில் , தேர்வு முடிவில் மதிப்பெண் குறைவாக எடுத்தாக கூறப்படுகிறது . குறைந்த மதிப்பெண் பெற்றதால் அவரது பெற்றோர் மாணவியை கண்டித்தனராம்.
இதில் , மனமுடைந்த மாணவி நேற்று மாலை வீட்டில் உள்ள பேனில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த மாணவியின் பெற்றோர் மாணவியை மீட்டு ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் .