ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பூரணி  சென்னைக்கு பணியிடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு.
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை துணை காவல்துறை கண்காணிப்பாளராகக் கடந்த ஓராண்டு காலமாகச் சிறப்பாகப் பணியாற்றி வந்தவர் பூரணி, தற்பொழுது அவர்களை ராணிப்பேட்டை மாவட்ட துணை காவல்துறை கண்காணிப்பாளர் பொறுப்பிலிருந்து விடுவித்து அவரைச் சென்னையில் சைபர் பிரிவிற்கு பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார் 

இதையடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் பயிற்சியை நிறைவு செய்த துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு, ராணிப்பேட்டை உட்கோட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார்.