Ranipettai: 78.2 mm rainfall in kalavai
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் அதிகபட்ச மழையளவாக 78.2 மி.மீ மழை பதிவானது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்று முன்தினம் பரவலான மழை பதிவானது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை இரவு தொடங்கி விடிய, விடிய பெய்தது. வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக வேலூரில் 48.8 மி.மீ மழை பதிவானது. குடியாத்தம் 7, காட்பாடியில் 48, மேல் ஆலத்தூரில் 19.6, பொன்னையில் 46, அம்முண்டி சர்க்கரை ஆலை பகுதியில் 22 மி.மீ மழை பதிவாகியுள்ளன. அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக கலவையில் 78.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அரக்கோணத்தில் 0.2, ஆற்காட்டில் 35.1, வாலாஜாவில் 11, அம்மூரில் 2, சோளிங்கரில் 21 மி.மீ மழை பதிவாகியுள்ளன.