ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து மாவட்ட காவல் துறை சார்பில் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பேஸ்புக் சேகர் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். இதையும் படிக்க | சுதந்திர தினம்: ஈரோட்டில் தேசியக் கொடியை ஏற்றினார் ஆட்சியர்

இதன்பிறகு, சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழை வழங்கப்பட்டது. அதேபோல் வருவாய் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும், காரோன காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதையடுத்து விவசாயிகள் உள்ளிட்ட பயனாளிகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.