ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வரும் புகார்களை மாநில அரசால் நியமிக்கப்பட்ட வருவாய் அலுவலர்கள் குறைதீர் அலுவலராக இருந்து அந்த விநியோகத் திட்ட புகார்கள் மீது விசாரணை மேற்கொள்வார்கள் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் அவர்கள் இன்று தகவல் தெரிவித்துள்ளார்

பிறகு புகார்களை எப்படி பதிவு செய்வதற்கான நடைமுறைகள் என்னவென்றால் 

பாதிக்கப்பட்ட எந்த ஒரு நபர் மாவட்ட குறைதீர் அலுவலரிடமோ அல்லது மாவட்ட குறைதீர் அலுவலரால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அலுவலரிடமோ நேரடியாகவோ அல்லது எழுத்து வடிவிலோ மின்னஞ்சல் அல்லது கைப்பேசி எண் 9489543000 அல்லது தொலைபேசி எண் 04172 - 299973 வாயிலாகவோ புகாரை பதிவு செய்யலாம் 

புகார் பதிவு செய்யும் நபர் அதில் புகாரின் மீது குறித்த விவரங்களும் புகாரை கொடுக்கும் நபரின் தொலைபேசி எண்ணும் அவரது விலாசமும் இதில் பதிவிட வேண்டும் 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுக்கும் வரும் நபர் எழுத்து வடிவில் புகார் அளிக்க இயலாத நிலை இருந்தால் அவரது கோரிக்கையை புகார் மனுவை நியாயமான உதவியை மாவட்ட குறைதீர் அலுவலரால் வழங்கப்படும் பிறகு ஒவ்வொரு புகாருக்கும் தனிப்பட்ட எண் ஒதுக்கப்படும்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் அலுவலர் புகார்களை மற்றொரு அலுவலருக்கு மின்னஞ்சல் மற்றும் ஏனைய வகையில் மாற்றப்படலாம் ஆனால் புகார்களை அலுவலருக்கு ஏற்கக்கூடிய காலதாமதத்தை குறைதீர் ஒரு செய்வதில் ஏற்பட்ட காலதாமதமும் ஒரு காரணமாக இருக்காது

பெறப்பட்ட அனைத்து புகார்களும் உண்மைகள் என மாநில அரசால் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் புகார்களை சரிபார்க்கப்பட்ட பின்னர் அதனை தீர்வு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் புகார் பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் புகாரின் மீது முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்

எனவே பொதுமக்கள் அனைவரும் விநியோகத் திட்டத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் கொண்ட புகார்களை மாவட்ட வருவாய் அலுவலர்கள் அவரிடம் புகார் மனுவை அளித்து அதற்கான தீர்வை விரைவில் காணப்படும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்