கொரோனோ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு மாஸ்க், சானிடைர் வழங்கினார்.

ராணிபேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தக்கோலம் போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் பின்னர் தக்கோலம் போலீஸார் சார்பில் பயண்டியம்மன் கோயில் அருகில் கிராம மக்களுக்கான கொரோனோ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அப்போது பொது மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம், மாஸ்க் மற்றும் சானிடைசர் உள்ளிட்டவைகளை போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் வழங்கினார்.

தொடர்ந்து சோப்பு கொண்டு அடிக்கடி கைகளை கழுவுவது பற்றியும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர், இந் நிகழ்ச்சிகளில் அரக்கோணம் போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், தக்கோலம் அரக்கோணம் மது விலக்கு மற்றும் அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பாரதி, தக்கோலம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, ஏட்டு தங்கராஜ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.