7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
சென்னை: தமிழகம் முழுவதும் 7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 

* ராணிபேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் ஐ.பி.எஸ், மதுரை பட்டாலியன் தமிழக சிறப்பு போலீஸ், கமாண்டன்ட் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். 

* மதுரை பட்டாலியன் தமிழக சிறப்பு போலீஸ், கமாண்டன்ட் பணியில் இருந்த இளங்கோ ஐ.பி.எஸ், சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். 

* சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் ஐ.பி.எஸ், ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

* ராமநாதபுரம் கடலோர காவல் துறை, கண்காணிப்பாளர் ஜெயந்தி ஐ.பி.எஸ், சேலம் மண்டல அமலாக்கத் துறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். 

* சேலம் மண்டல அமலாக்கத் துறை கண்காணிப்பாளராக இருந்த மகேஷ் குமார் ஐ.பி.எஸ், நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

* சென்னை, பொருளாதார குற்றப் பிரிவு காவல் பொது ஆய்வாளராக இருந்த கல்பனா நாயக் ஐ.பி.எஸ், சென்னை ரயில்வே காவல் பொது ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

* பணி விடுப்பில் இருந்து திரும்பிய அபின் தினேஷ் மோதக் , ஐபிஎஸ், சென்னை, பொருளாதார குற்றப் பிரிவு காவல் பொது ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.