காட்பாடி வந்த, ரயிலின் கழிவறையில் கிடந்த பெண் குழந்தையை போலீசார் மீட்டனர்.திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வரை ஒர்க் மேன் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. இந்த ரயில் நேற்று மாலை 6:00 மணிக்கு ஜோலார்பேட்டையில் புறப்பட்டு, இரவு 9:00 மணிக்கு காட்பாடிக்கு வந்தது.ரயில்வே போலீசார் ரயில் பெட்டியில் சோதனையில்

காட்பாடி: காட்பாடி வந்த, ரயிலின் கழிவறையில் கிடந்த பெண் குழந்தையை போலீசார் மீட்டனர். திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வரை ஒர்க் மேன் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. இந்த ரயில் நேற்று மாலை 6:00 மணிக்கு ஜோலார்பேட்டையில் புறப்பட்டு, இரவு 9:00 மணிக்கு காட்பாடிக்கு வந்தது. ரயில்வே போலீசார் ரயில் பெட்டியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரயில் கழிவறையில் பிறந்த இரண்டே நாள் ஆன பெண் குழந்தை ஒரு பைக்குள் மூடிக்கிடந்தது தெரியவந்தது. போலீசார் குழந்தையை மீட்டு சிகிச்சை அளித்து சைல்ட் ஹெல்ப் எண் 1098 துறையிடம் ஒப்படைத்தனர். காட்பாடி ரயில்வே போலீசார் பெண் குழந்தையை போட்டு விட்டுச் சென்றவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.