அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் சார்பில் பயணிகளுக்கு கொரோனோ விழிப்புணர்வு நடத்தி, துண்டுபிரசுரம், மாஸ்க் மற்றும் சானிடைசர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

தொடர்ந்து சோப்பு கொண்டு அடிக்கடி கைகளை கழுவுவது பற்றியும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது பற்றின விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர், பின்னர், பயணிகளுக்கு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மரக்கன்றுகளை வழங்கினார். 

இந் நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.