Shadowless Day' in Tamil Nadu today
வருடந்தோறும் 2 நாட்களில் மட்டும் மதிய நேரத்தில் நிழலை பார்க்க முடியாத அளவுக்கு நிழல் நமது காலின் அடியில் விழும். இதுதான் 'நிழலில்லா நாள்' என அழைக்கப்படுகிறது. இந்த நிழலில்லா நாள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நிகழும்.
அதன்படி, ஆகஸ்டு மாதமான இன்று இந்த நிழலில்லா நாளை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் நிழலில்லா நாளை காணலாம். ஆவடி, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஆற்காடு, ஆரணி, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஓசூரில் காணலாம்.

சென்னை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கத்தில் நிழலில்லா நாளை காட்சிப்படுத்தவும் விளக்கமளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.