குறள் : 496
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.

மு.வ உரை :
வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.

கலைஞர் உரை :
ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் தேர் கடலிலே ஓடாது கப்பல் நிலத்தில் போகாது என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை :
வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர்கள் கடலில் ஒடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தில் ஓடமாட்டா.

Kural 496
Katalotaa Kaalval Netundher Katalotum
Naavaayum Otaa Nilaththu

Explanation :
Wide chariots with mighty wheels will not run on the ocean; neither will ships that the traverse ocean move on the earth.



இன்றைய பஞ்சாங்கம்
02-09-2021, ஆவணி 17, வியாழக்கிழமை, தசமி திதி காலை 06.22 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. திருவாதிரை நட்சத்திரம் பகல் 02.57 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் பகல் 02.57 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் - 02.09.2021

மேஷம்
இன்று உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமின்றி கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள்.

ரிஷபம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். தெய்வ வழிபாடு நல்லது.

மிதுனம்
இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

கடகம்
இன்று குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் குறையும்.

சிம்மம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.

கன்னி
இன்று உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். சேமிப்பு உயரும். பெண்களுக்கு வேலைபளு குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.

துலாம்
இன்று உங்களுக்கு உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறைந்து காணப்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் அலைச்சலுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது.

விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். வெளி இடங்களில் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

தனுசு
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறைந்து நிம்மதி ஏற்படும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் லாபம் பெருகும். தேவைகள் பூர்த்தியாகும்.

மகரம்
இன்று நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

கும்பம்
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களால் மன அமைதி குறையலாம். புதிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலைபளு சற்று குறையும். வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் உண்டாகும்.

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,