குறள் : 503
அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

மு.வ உரை :
அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.

கலைஞர் உரை :
அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்துவிட இயலாது.

சாலமன் பாப்பையா உரை :
அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.

Kural 503
Ariyakatru Aasatraar Kannum Theriyungaal
Inmai Aridhe Veliru

Explanation :
When even men who have studied the most dificult works and who are free from faults are (carefully) examined it is a rare thing to find them without ignorance.





இன்றைய பஞ்சாங்கம்
08-09-2021, ஆவணி 23, புதன்கிழமை, துதியை திதி பின்இரவு 02.34 வரை பின்பு வளர்பிறை திரிதியை. உத்திரம் நட்சத்திரம் பகல் 03.55 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பகல் 03.55 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சந்திர தரிசனம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 

இன்றைய ராசிப்பலன் - 08.08.2021

மேஷம்
இன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டிகள் விலகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன்கள் தீரும்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். 

மிதுனம்
இன்று வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பணபிரச்சினை குறையும். எதிலும் நிதானம் தேவை. 

கடகம்
இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையக்கூடும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளின் ஆதரவால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி
இன்று உங்களுக்கு ஆனந்தமான செய்தி வந்து சேரும். சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வருமானம் பெருகும்.

துலாம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

விருச்சிகம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை கூடும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும்.

தனுசு
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். பணவரவு தாரளமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

மகரம்
இன்று நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறிது செலவிட நேரிடும். தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை நீங்கும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை அளிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கும்பம்
இன்று உங்களுக்கு வீண் பிரச்சினைகள் தேடி வரும். செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்பட்டு மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மீனம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வழக்கு சம்பந்தங்களில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்படுவதால் லாபம் அதிகமாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். கடன்கள் குறையும்.

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,