குறள் : 498
சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
மு.வ உரை :
சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால் பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.
கலைஞர் உரை :
சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்.
சாலமன் பாப்பையா உரை :
பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.
Kural 498
Sirupataiyaan Sellitam Serin Urupataiyaan
Ookkam Azhindhu Vitum
Explanation :
The power of one who has a large army will perish if he goes into ground where only a small army can act.
இன்றைய பஞ்சாங்கம்
04-09-2021, ஆவணி 19, சனிக்கிழமை, துவாதசி திதி காலை 08.24 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பூசம் நட்சத்திரம் மாலை 05.45 வரை பின்பு ஆயில்யம். சித்தயோகம் மாலை 05.45 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. சனிப் பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது.
இராகு காலம் - காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 04.09.2021
மேஷம்
இன்று தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கலாம். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து நிம்மதி ஏற்படும்.
ரிஷபம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இனிய நிகழ்வுகள் நடைபெறும். வரவேண்டிய தொகை வந்து சேரும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
கடகம்
இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு குடும்பத்தினரால் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.
கன்னி
இன்று நீங்கள் எதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.
துலாம்
இன்று உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
தனுசு
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்யாது இருப்பது நல்லது. வேலையில் மேலதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.
மகரம்
இன்று தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனசங்கடங்கள் மறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.
கும்பம்
இன்று இல்லத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி கூடும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். புதிய முயற்சிகள் அனைத்திலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
மீனம்
இன்று எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,