குறள் : 476
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.
மு.வ உரை :
ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர் அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால் அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.
கலைஞர் உரை :
தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.
சாலமன் பாப்பையா உரை :
ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அம் முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும்.
Kural 476
Nunikkompar Erinaar Aqdhiran Thookkin
Uyirkkirudhi Aaki Vitum
Explanation :
There will be an end to the life of him who having climbed out to the end of a branch ventures to go further.
இன்றைய பஞ்சாங்கம்
14-08-2021, ஆடி 29, சனிக்கிழமை, சஷ்டி திதி பகல் 11.51 வரை பின்பு வளர்பிறை சப்தமி. சித்திரை நட்சத்திரம் காலை 06.56 வரை பின்பு சுவாதி நட்சத்திரம் பின்இரவு 05.44 வரை பின்பு விசாகம். மரணயோகம் காலை 06.56 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். முருக- லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.
இராகு காலம் - காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 14.08.2021
மேஷம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்ல படியாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வரும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும். நவீன பொருட் சேர்க்கை உண்டாகும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் உறவினர் வருகை மகிழ்ச்சியை தரும். புத்திர வழியில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு மனதில் குழப்பம் தேவையற்ற கவலை உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.
கடகம்
இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆடம்பர பொருட்களால் வீண் விரயங்கள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் சில இடையூறுகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.
சிம்மம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். தொழில் ரீதியாக அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும்.
துலாம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். சுபமுயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம். தெய்வ வழிபாடு நல்லது.
தனுசு
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.
மகரம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை தரும்.
மீனம்
இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. சுப முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,