குறள் : 475
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மு.வ உரை :
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.

கலைஞர் உரை :
மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முறிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.

சாலமன் பாப்பையா உரை :
மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.

Kural 475
Peelipey Saakaatum Achchirum Appantanjjch
Aala Mikuththup Peyin

Explanation :
The axle tree of a bandy loaded only with peacocks� feathers will break if it be greatly overloaded.




இன்றைய பஞ்சாங்கம்
13-08-2021, ஆடி 28, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி பகல் 01.43 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. அஸ்தம் நட்சத்திரம் காலை 07.59 வரை பின்பு சித்திரை. அமிர்தயோகம் காலை 07.59 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. கருட பஞ்சமி. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00  

இன்றைய ராசிப்பலன் - 13.08.2021

மேஷம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் ரீதியான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத பணவரவு ஏற்படும்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். நெருங்கியவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் நற்பலன்கள் உண்டாகும். சிக்கனமாக இருப்பது நல்லது.

மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத் தான் இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொன் பொருள் சேரும்.

சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு புதிய இடம் பொருள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் உண்டாகும்.

கன்னி
இன்று நீங்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கூட்டுத் தொழில் புரிவோர்க்கு கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

துலாம்
இன்று நீங்கள் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு சற்று குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உங்கள் பிரச்சினைகள் தீர உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வீட்டின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும்.

தனுசு
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வியாபாரம் சிறப்பாக 
நடைபெறும்.

மகரம்
இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாகவே இருக்கும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க சற்று தாமதமாகும். வேலை செய்யும் இடங்களில் சக தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து செயல்படுவதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் சிக்கனம் தேவை.

கும்பம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலைகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று நிதானமாக செயல்படுவது உத்தமம். மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. பணியில் கவனம் தேவை.

மீனம்
இன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். உடல் நிலை சீராகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும்.