குறள் : 490
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

மு.வ உரை :
பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும் காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

கலைஞர் உரை :
காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை :
ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி.

Kural 490
Kokkokka Koompum Paruvaththu Matradhan
Kuththokka Seerththa Itaththu

Explanation :
At the time when one should use self-control let him restrain himself like a heron; and let him like it strike when there is a favourable opportunity.




இன்றைய பஞ்சாங்கம்
27-08-2021, ஆவணி 11, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி மாலை 06.49 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. அஸ்வினி நட்சத்திரம் இரவு 12.47 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் இரவு 12.47 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00  

இன்றைய ராசிப்பலன் - 27.08.2021

மேஷம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். ஆன்மீக தெய்வீக வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

ரிஷபம்
இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். வீட்டில் ஒற்றுமை குறையலாம். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கடன்கள் ஓரளவு குறையும்.

மிதுனம்
இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் புதிய மாற்றம் ஏற்படும்.

கடகம்
இன்று நீங்கள் செய்ய நினைக்கும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனவருத்தங்கள் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

சிம்மம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். வியாபார ரீதியாக எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும்.

கன்னி
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

துலாம்
இன்று உறவினர்களால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் -சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.

தனுசு
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும்.

மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் வேலைபளு சற்று குறையும். 

கும்பம்
இன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும்.

மீனம்
இன்று நீங்கள் குடும்பத்தினரை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,