குறள் : 494
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.

மு.வ உரை :
தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின் அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.

கலைஞர் உரை :
ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை :
ஏற்ற இடத்தை அறிந்து அதைச் சூழ்ந்து செயல் செய்வார் என்றால், அவரை வெல்ல எண்ணிய பகைவர். அவ் எண்ணத்தில் தோல்வி அடைவர்.

Kural 494
Enniyaar Ennam Izhappar Itanarindhu
Thunniyaar Thunnich Cheyin

Explanation :
If they who draw near (to fight) choose a suitable place to approach (their enemy) the latter will have to relinquish the thought which they once entertained of conquering them.


இன்றைய பஞ்சாங்கம்
31-08-2021, ஆவணி 15, செவ்வாய்க்கிழமை, நவமி திதி பின்இரவு 04.24 வரை பின்பு தேய்பிறை தசமி. ரோகிணி நட்சத்திரம் காலை 09.44 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் காலை 09.44 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். 

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் - 31.08.2021

மேஷம்
இன்று பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். திருமண முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகலாம். சேமிப்பு குறையும். குடும்பத்தில் இதுவரை இருந்த நெருக்கடிகள் சற்று விலகும். சிக்கனமுடன் செயல்பட்டால் கடன் பிரச்சினை குறையும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

ரிஷபம்
இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். எடுக்கும் புதிய முயற்சிகளில் தாமதப் பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியால் ஓரளவு பிரச்சினைகள் குறையும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மிதுனம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

கடகம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது நம்பிக்கையை தரும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். பொருளாதார நிலை உயரும். கடன் பிரச்சினைகள் தீரும். பொன் பொருள் சேரும்.

கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட காலதாமதமாகும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.

துலாம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. சுபகாரியங்களை தவிர்க்கவும்.

விருச்சிகம்
இன்று நீங்கள் எந்த செயலையும் உற்சாகத்தோடு செய்வீர்கள். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

தனுசு
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

மகரம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்களில் சில இடையூறுகள் உண்டாகும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்கள் துணை நிற்பர். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

கும்பம்
இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். உடல் நிலை புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப்பலன் கிட்டும். வங்கி சேமிப்பு உயரும். 

மீனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி தரும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை பலப்படும். தொழிலில் நண்பர்களின் ஒத்துழைப்பால் நற்பலன் கிட்டும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,