✧ குறுக்கீட்டு விளைவின் அடிப்படையில் புகைப்படம் மூலமாக வண்ணங்களைப் பிரித்தெடுத்த காபிரியேல் லிப்மன் 1845ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி ஐரோப்பாவில் உள்ள ஹாலரிக் என்ற ஊரில் பிறந்தார்.

🚁 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி ஜன்கர்ஸ் ஜூ 287 என்ற முதல் விமானம் இயக்கப்பட்டது.

🎎 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி வண்ணம் மற்றும் சத்தத்துடனான முதல் கார்டூன் யூப்லிவர்க்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது.

நினைவு நாள் :-

ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர்
✋ இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞான ஒளியாய் திகழ்ந்த ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் 1836ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி, இந்தியாவின் மேற்குவங்காள மாநிலத்தில் ஹூக்லி மாவட்டத்திலுள்ள காமர்புகூர் என்ற இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் காதாதர் சட்டோபாத்யாயர்.

✋ பொருளாதார நிலை காரணமாக, தன்னுடைய சிறு வயதில் கொல்கத்தாவிற்கு வேலைத் தேடி சென்றார் இராமகிருஷ்ண பரமஹம்சர். அங்கே தன்னுடைய அண்ணனுக்கு உதவியாக கோவிலில் வேலைப் பார்த்து வந்தார். அவர் இறந்தவுடன் அதே காளி கோவிலின் பூசாரியானார்.

✋ இவர் ஆன்மீகச் சிந்தனைகளை உலகெங்கும் பரப்பினார். இவருடைய சீடர்களுள் ஒருவர் நரேந்தரநாத் தத்தா என அழைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தர் ஆவார்.

✋ 'கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்' என்பதை தெளிவுப்படுத்திய இராமகிருஷ்ண பரமஹம்சர் 1886ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி தனது 50வது வயதில் மறைந்தார்.


பிறந்த நாள் :-

அ.மாதவையா
🏊 தமிழ் முன்னோடி எழுத்தாளர், நாவல் ஆசிரியர், பத்திரிகையாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட அ.மாதவையா 1872ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி திருநெல்வேலி அருகே பெருங்குளம் கிராமத்தில் பிறந்தார்.

🏊 இவர் நீச்சலில் கில்லாடி. ஒருமுறை சென்னையில் போலீஸ் அதிகாரி பவனந்தம் பிள்ளையுடன் பந்தயம் கட்டி கடலில் ஒரு மைல் தூரம் நீந்தி வெற்றி பெற்றாராம். குற்றால அருவியின் உச்சியை 3 ஆங்கிலேயர்கள் கடக்க முயன்று வழுக்கி விழுந்து இறந்த 3-ம் நாளில், அதே இடத்தில் அருவியைக் கடந்து சாதித்துக் காட்டினார்.

🏊 இந்திய கும்மி என்ற கவிதைப் போட்டி 1914-ல் நடந்தது. பாரதியாரும் அதில் கலந்துகொண்டார். மாதவையாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. செந்தமிழ் நாடென்னும் போதினிலே பாடலுக்காக பாரதிக்கு 2-ம் பரிசு கிடைத்தது. பஞ்சாமிர்தம் என்ற பத்திரிகையை 1925-ல் தொடங்கினார். நாவல், சிறுகதைத் தொகுப்பு, நாடகங்கள், கவிதைகள் என ஏராளமான கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

🏊 சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக 1925-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் கூட்டத்தில் தமிழை இளங்கலைப் பட்டப்படிப்பில் கட்டாயப் பாடமாக சேர்க்க வேண்டும் என உரையாற்றினார். பேசி முடித்து அமர்ந்ததும் அந்த இடத்திலேயே உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 53.