👉 1871ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி முதன் முதலாக விமானத்தில் பறந்து காட்டிய சகோதரர்களுள் இளைய சகோதரரான ஆர்வில் ரைட் பிறந்தார்.

👉 1662ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி கால்குலேட்டரை கண்டுபிடித்தவரும், கணிதத்தில் பாஸ்கல் விதியை அறிமுகப்படுத்தியவருமான பிளைஸ் பாஸ்கல் மறைந்தார்.

👉 1960ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி சோவியத்தின் ஸ்புட்னிக் 5 விண்கலம் பெல்கா, ஸ்ட்ரெல்கா என்ற இரு நாய்களையும், 40 சுண்டெலிகளையும், 2 எலிகளையும், பல வகைத் தாவரங்களையும் கொண்டு சென்றது.

👉 1964ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி உலகத்தின் முதல் செயற்கைக்கோள் தொடர்பு நிலையமான சின்கோம்3 அமெரிக்காவில் நிறுவப்பட்டது.

👉 1895ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி கொழும்பு தலைமை அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டது.

👉 1768ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் அமைக்கப்பட்டது.

முக்கிய தினம் :-

உலக புகைப்பட தினம்
👉 மரத்தாலான புகைப்படக் கருவியில் லென்ஸ் பொருத்தப்பட்ட இதற்கு டாகுரியோடைப் என்று பெயரிடப்பட்டு மிகவும் பிரபலமாக விளங்கியது. இந்த முறைக்கு பிரான்ஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் ஒப்புதல் அளித்தது. இதன் செயற்பாடுகளை 1839ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி 'ப்ரீ டூ தி வேர்ல்ட்' என உலகம் முழுவதும் அறிவித்தது. அந்த நாளையே புகைப்படக் கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்துகொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ஆம் தேதி உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.


உலக மனித நேய தினம்
👉 போர், இயற்கைப் பேரழிவு, நோய், ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்ட உலக மனித நேய தினம் ஆகஸ்டு 19ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இது 2008ஆம் ஆண்டு ஐ.நா. சபையினால் உருவாக்கப்பட்டது.

பிறந்த நாள் :-

சத்தியமூர்த்தி
👉 விடுதலைப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தி 1887ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயத்தில் பிறந்தார். இவர் நாடகம், இசை உள்ளிட்ட கலைகளிலும் ஆர்வம் கொண்டவர். சமூக சீர்திருத்தச் சிந்தனை மிக்கவர்.

👉 சென்னை பார்த்தசாரதி கோவிலில் 1930-ல் தேசிய கொடியை ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார். இதுபோல பல சத்தியமூர்த்திகள் இருந்தால் ஆங்கிலேயர் எப்போதோ ஓடியிருப்பர் என்றார் காந்தியடிகள். சைமன் கமிஷன் எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், சுதேசி இயக்கம், சத்தியாகிரகம் ஆகியவற்றில் இவரது பங்கு மகத்தானது. தனது அனைத்து சொத்துகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்துவிட்டு, வீட்டு வாடகைகூட கொடுக்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார்.

👉 இவரது ஒப்பற்ற பணியை நினைவுகூர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கு சத்தியமூர்த்தி பவன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தீரர், சொல்லின் செல்வர், நாவரசர் என்றெல்லாம் புகழப்பட்ட சத்தியமூர்த்தி, முதுகுத்தண்டு காயத்தால் பாதிக்கப்பட்டு 56வது வயதில் (1943) மறைந்தார்.


சங்கர் தயாள் சர்மா
👉இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவரான சங்கர் தயாள் சர்மா 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி பிறந்தார். இவர் 1992இல் இருந்து 1997 வரை பதவியில் இருந்தார். இதற்கு முன் இவர் எட்டாவது துணை குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். 1952இல் இருந்து 1956 வரை போபால் மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார். இவர் 1999ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி 81வது வயதில் மறைந்தார்.