👉 1000ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி ஹங்கேரி நாடு முதலாம் ஸ்டீபன் என்பவரால் உருவாக்கப்பட்டது.

👉 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி கேட்வே ஆர்ச்சை வடிவமைத்த கட்டிடக்கலைஞர் ஈரோ சாரினென் பின்லாந்தில் பிறந்தார்.

👉 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி நாசா, வைக்கிங் 1 விண்கலத்தை செவ்வாய் நோக்கி ஏவியது.

👉 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி நாசா, வொயேஜர் 2 விண்கலத்தை ஏவியது.

முக்கிய தினம் :-

உலக கொசு ஒழிப்பு தினம்
👉 உலகில் முக்கியமாக 3 வகை கொசுக்கள் தான் கொடிய நோய்களை பரப்புகிறது. அனோபிலஸ் என்ற கொசு மலேரியா காய்ச்சலையும், ஏடிஸ் ஏஜிட்டி என்ற கொசு டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோயையும், கியூலக்ஸ் என்ற கொசு யானைக்கால் நோயையும், ஜே.இ. என்ற கொசு ஜப்பானிய மூளை காய்ச்சலையும் பரப்புகிறது என கடந்த 1987ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி சர்ரெனால்ட்ரோஸ் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். அந்நாளே கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சுகாதாரத்தை பேணுவோம், நோயின்றி வாழ்வோம் என கொசு ஒழிப்பு தினமான இன்று சபதம் ஏற்போம்.


பிறந்த நாள் :-

என்.ஆர்.நாராயண மூர்த்தி
🏢 இந்தியாவின் புகழ் வாய்ந்த தொழிலதிபரும், சமூக சீரமைப்பு மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகிய சமூகப் பணிகளை மேற்கொண்டு வருபவருமான என்.ஆர்.நாராயண மூர்த்தி 1946ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரில் பிறந்தார்.

🏢 இவர் 1981-ல் மிக குறைந்த முதலீட்டுடன் சில நண்பர்களுடன் சேர்ந்து 'இன்ஃபோசிஸ்' மென்பொருள் நிறுவனத்தை தொடங்கினார். அடுத்த ஆண்டே பெங்கள10ரில் தன் அலுவலகத்தை இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடங்கியது. அதுவே இதன் தலைமை அலுவலகமாக மாறியது.

🏢 இவரது தன்னலமற்ற தொண்டுகளைப் பாராட்டி, அமெரிக்காவின் கவுரவம் மிக்க 'ஹூவர் பதக்கம்' வழங்கப்பட்டது. இவரது சமூக சேவைகளுக்காக, பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் உள்ளிட்ட விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. நேர்மை, எளிமை, உண்மையை தன் வாழ்க்கையில் பின்பற்றுபவர்.

🏢 இந்தியா தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் வல்லரசாக திகழ்வதற்கு காரணமாக திகழ்பவர் நாராயணமூர்த்தி தான் என்று போற்றப்படுகிறார்.

ராஜீவ் காந்தி
🏁 இந்தியாவின் 6வது பிரதமர் மற்றும் அரசியல்வாதியான ராஜீவ் காந்தி 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.

🏁 இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமானம் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரென கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார்.

🏁 இந்திய அமைதி காக்கும் படையினை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்று தர முயன்றார். 1991ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி அன்று ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.