🔷 1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்டது.

🔥 1921ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி மகாத்மா காந்தி அன்னியத் துணிகளை எரிக்கும் போராட்டத்தை தொடங்கினார்.

👉 1926ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

📺 1932ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி தொலைக்காட்சி சேவையை முதன் முதலாக பிபிசி சோதனை செய்தது.

🏁 1818ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி இந்தியாவின் 1வது தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ் மறைந்தார்.

🏁 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சீர்திருத்தவாதி ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே மறைந்தார்.


முக்கிய தினம் :-

சென்னை தினம்
🎪 பல எண்ணற்ற பெருமைகளை கொண்ட சென்னைக்கு இன்று 378-வது பிறந்த நாள்.

🎪 சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாக கருதப்படும் கி.பி.1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதியை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு தினமாகும்.

🎪 பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டிசோசா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம்.

🎪 முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004-ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பிறந்த நாள் :-

ரே பிராட்பரி
✍ அமெரிக்காவின் பிரபல புனைகதை எழுத்தாளர் ரே பிராட்பரி 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலத்திலுள்ள வாகிகன் நகரில் பிறந்தார்.

✍ இவர் முழு நேர எழுத்தாளராக 1943-ல் மாறினார். 'டார்க் கார்னிவல்' என்ற இவரது முதல் சிறுகதை தொகுப்பு 1947-ல் வெளிவந்தது. 1950-ல் இவரது பல கதைகள் 'ஈ.சி. காமிக்ஸ்' நிறுவனத்தால் படக்கதைகளாக வெளியிடப்பட்டன.

✍ 1953-ல் வெளியான இவரது 'ஃபாரன்ஹீட் 451' புதினம் உலகப்புகழ் பெற்றது. அமெரிக்க தேசிய கலைப் பதக்கம், சிறப்பு புலிட்சர் பரிசு, எம்மி விருது உட்பட பல விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் கியூரியாசிட்டி ரோவர் வாகனம் தரையிறங்கிய இடத்துக்கு 'பிராட்பரி லேண்டிங்' என்று இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

✍ இவர் தினமும் பல மணி நேரம் எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஏறக்குறைய 600 சிறுகதைகள், ஏராளமான கவிதைகள், கட்டுரைகள், திரைக்கதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். எழுத்தையே சுவாசித்து வந்த ரே பிராட்பரி 91வது வயதில் (2012) மறைந்தார்.