மத்திய ஆயுதப்படை, அசாம்ரைபிள் படையில் காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்தினருக்கான ஆட்தேர்வு நடைபெறஉள்ளது. 
இதற்கு தகுதியான வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் வருகிற 31ஆம் தேதிக்குள் https://ssc.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பித்தவிவரத்தை முன்னாள் படைவீரர் நல அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். 

இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார் .