ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் பள்ளி திறக்கப்படாது என்று விருதுநகர் ஆட்சியர் மேகநாத ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். 
நீண்ட கால இடைவெளிக்கு பிறகு தமிழகத்தில், பள்ளி, கல்லூரிகள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளன.  

9 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

அதில், தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் பள்ளி திறக்கப்படாது என்றும், அனைத்து வகை பள்ளிகளிலும், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் இம்மாத இறுதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.