ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் காப்பு காட்டில் இருந்து வெட்டி கடத்த முயன்ற ரூ ,13 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து ஆற்காடு வனச்சரக அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலூர் மண்டல வனப்பாதுகாவலர் சுஜாதா உத்தரவின்பேரில் மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ் குமார் அறிவுறுத்தலின்படி ஆர்காடு வனசரக அலுவலர் தலைமையில் அம்மூர் காப்பு காட்டில் கடந்த 31ஆம் தேதி ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது அப்போது அங்கு 1. 3 டன் எடையுள்ள 43 செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்த முயன்ற திருவண்ணாமலை மாவட்டம் வேட்டை கிரி பாளையத்தை சேர்ந்த செல்வம் கானமலை பஞ்சாயத்து அரசனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு ஆகியோரை மடக்கிப் பிடித்து அவர்களிடம் இருந்து 13 லட்சம் மதிப்பிலான செம மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து அவர்கள் மீது செம்மரக்கடத்தல் வழக்கு பதியப்பட்டு அரக்கோணம் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தி அரக்கோணம் கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும் தப்பி ஓடிய பூபதி நந்தகுமார் பாலாஜி ராஜி ஆகியோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது