வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்கு நடைபெறும் திருமணத்தை தடுக்கும் பணியில் மாவட்ட சமூக நலத்துறை, சைல்டுலைன் அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றைய தினம் முகூர்த்த நாள் என்பதால் 3 மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் சிறுமிகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தன.

அதன்பேரில் அலுவலர்கள் அங்கு சென்று 18 வயது நிரம்பாத சிறுமிகளின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். வேலூர் மாவட்டத்தில் 3 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 சிறுமிகளின் திருமணம், திருப்பத்தூர் மாவட்டத்தில் 8 சிறுமிகளின் திருமணம் என்று நேற்று ஒரே நாளில் 3 மாவட்டங்களில் 15 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதாக சமூக நலத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.