ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சேர்ந்தவர் துரைவேலு என்பவரின் மகன் சுதர்சனன் லாரியின் உரிமையாளர் அவர் 

அவரது 2 லாரிகளில் நேற்று இரவு சென்னையிலிருந்து ஒசூருக்கு ஈயகட்டிகளை ஏற்றி வந்த டிரைவர்கள் சுகுமார் ஒரு லாரியையும் மற்றொருலாரியை மாரி என்பவரும் ஓட்டி வந்துள்ளனர் 

பிறகு லாரி வாலாஜாபேட்டை அடுத்த 
வீ. சி. மோட்டூரில் உள்ள சர்விஸ் சாலையில் டிரைவர்கள் இருவரும் லாரிகளை நிறுத்திவிட்டு லாரியில் உறங்கியுள்ளனர்

அப்போது லாரியின் அருகே வந்த மர்ம நபர்கள் ₹10லட்சம் ரூபாய் மதிப்புள்ள 40ஈயக்கட்டிகளை திருடிச் சென்றுள்ளனர்

பிறகு லாரி டிரைவர்கள் சுகுமார் மற்றும் மாரி காலையில் தூங்கி எழுந்து பார்த்தபோது லாரியில் இருந்த ஈயக்கட்டிகள் திருடு போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர் 

அப்போது லாரியின் உரிமையாளர் சுதர்சனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனே லாரியின் உரிமையாளர் சுதர்சனன் அங்கு நடந்ததை லாரி டிரைவர்களிடம் கேட்டறிந்து பின்னர் 

வாலாஜாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார் பிறகு புகாரின்பேரில் விசாரித்தப் போலீஸார் சம்பவ இடத்தில் லாரிகளை நிறுத்தும் போது சந்தேகத்தின் அடிப்படையில் யாராவது அங்கு இருந்தார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்றது

அப்போது இதற்கு முன்னால டிரைவராக இருந்த தேவராஜ் 31 இருந்ததை அறிந்தனர் உடனே போலீஸார் தேவராஜை காவல்நிலையம் பிடித்து வந்து அவரிடம் விசாரணை செய்தனர்

அதில் டிரைவர் தேவராஜ் அவர் சுதர்சனத்திற்கு சொந்தமான லாரிகளில் டிரைவராக பணிபுரிந்தபோது தொடர்ந்து லாரிகளில் ஈயக்கட்டிகளை ஏற்றிச்சென்றுள்ளார் 

எனவே அவற்றில் சிலவற்றைத் திருடி செட்டிலாக நினைத்து தனது நண்பர்களான வாலாஜாப்பேட்டை ஆற்காடு தெத்து தெருவைச்சேர்ந்த முபாரக்-24 ஷாஜகான் இருவருடன் சேர்ந்து 3 பேரும் நோட்டமிட்டு வந்துள்ளது தெரியவந்தது

இந்நிலையில் தற்போது டிரைவராக உள்ள சுகுமார். மாரி ஆகியோர் லாரிகளை நிறுத்தியதையறிந்து ஏற்கனவே திட்டமிட்டபடி லோடு ஆட்டோவைக் கொண்டு வந்து லாரியில் இருந்த ₹10லட்சம் ரூபாய் மதிப்புள்ள 40 ஈயக்கட்டிகளை திருடியதாகவும் அவற்றை அருகே வன்னிவேடு கிராமத்தில் உள்ள காப்புக்காடு முட்புதருக்குள் மறைத்து வைத்திருப்பதாக மூவரும் ஒப்புக்கொண்டனர் 

இதனையடுத்து ஈயக்கட்டிகளைப் பறிமுதல் செய்த போலீஸார் தேவராஜ் முபாரக். ஷாஜகான் ஆகிய மூவரையும் கைது செய்து அரக்கோணம் சிறையில் அடைத்தனர்.