தமிழ்நாட்டில் கடந்த 1-ம் தேதி பள்ளிகள் திறந்த நிலையில், வெவ்வேறு பள்ளிகளில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பெற்றோர்கள், மாணவர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 2 மாணவிகளுக்கு கொரோனா உறுதியானது. இருவேறு பள்ளிகளை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவிக்கும், பிளஸ் 2 மாணவிக்கும் கொரோனா உறுதியானது. 

அதேபோல நாமக்கல் மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதியானது. கொரோனா உறுதியான மாணவி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.