ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகள் திறந்த முதல் நாளில் 34,481 மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்தனர். 
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கைவிடுத்தனர்.

பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று தமிழகம் முழுவதும் 9,10,11,12ம் வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, அரசு நிதியுதவி பள்ளி, தனியார் பள்ளிகள் என மொத்தம் 216 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. 
பள்ளி ஆசிரி யர்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகள் ஆய்வு செய்து அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்து வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். வகுப்பறைகளில் சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர வைத்து பாடம் கற்பிக்கப்பட்டது. 
< div>