ஆற்காடு டவுன் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் எஸ்ஐ மகாராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வேலூர் மெயின் ரோடு , மாசாப்பேட்டை அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட னர். 

அப்போது, அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த சோதனையில் பைக்குகளில் வந்த 4 பேர் மது குடித்துவிட்டு போதையில் ஓட்டிவந்தது தெரியவந்தது. 

இதையடுத்து , 4 பேருக்கும் தலா 10 ஆயிரம் அபராதம் விதித்த போலீசார் , தொடர்ந்து இதேபோல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர் .